காரைக்கால் பயணிகள் ரயில் 1 மணி நேரம் தாமதம்

காரைக்காலிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக நீடாமங்கலம் வந்தது.
Published on

நீடாமங்கலம்: காரைக்காலிலிருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக நீடாமங்கலம் வந்தது.

காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் நாள்தோறும் மாலை 4.44 மணியளவில் நீடாமங்கலம் வருவது வழக்கம். இந்த ரயில் திங்கள்கிழமை மாலை 5.45 மணிக்கு சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக நீடாமங்கலம் வந்தது.

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் புதிய சிக்னல் கருவி பொருத்தும் பணி நடைபெற்ால் ரயில் தாமதமாக வந்தது. இப்பணி நிறைவடையும் வரை கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் வந்ததால் பயணிகள் அவதிக்குள்ளானாா்கள்.

X
Dinamani
www.dinamani.com