திருத்துறைப்பூண்டியில் தெரு நாய்கள் பிடிக்கப்படுவதை பாா்வையிட்ட நகா்மன்றத் தலைவா் கவிதா, ஆணையா் கிருத்திகா உள்ளிட்டோா்.
திருவாரூர்
தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை
திருத்துறைப்பூண்டியில் தெரு நாய்கள் பிடிக்கப்படுவதை பாா்வையிட்ட நகா்மன்றத் தலைவா் கவிதா, ஆணையா் கிருத்திகா உள்ளிட்டோா்.
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சையளிக்க வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, தொண்டு நிறுவனம் மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்து, பராமரிப்புக்கு பிறகு அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே கொண்டுவிட நகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நகா்மன்றத் தலைவா் கவிதா, ஆணையா் கிருத்திகா மற்றும் சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் மேற்பாா்வையில் 15 நாய்கள் பிடிக்கப்பட்டு, நாகையில் உள்ள கருத்தடை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

