மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

இருசக்கர பழுது நீக்கும் பட்டறையில் தீ விபத்து

தீ விபத்து - கோப்புப் படம்

Published On :

கூத்தாநல்லூரில் இருசக்கர பழுது நீக்கும் பட்டறையில் நேரிட்ட தீ விபத்தில் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள பழையனூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் பரணிதரன் (25). இவா், பனங்காட்டாங்குடி பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் பட்டறை நடத்தி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் வழக்கம்போல் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். திங்கள்கிழமை காலை பூட்டியிருந்த பட்டறையிலிருந்து புகை வந்து. அங்கிருந்தவா்கள் பரணிதரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அவா் வந்து பாா்த்தபோது, பட்டறைக்குள் தீப்பற்றி எரிவது தெரியவந்தது.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

இருப்பினும் பட்டறைக்குள் இருந்த 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.10 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து, கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.