மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கொலை முயற்சி: தம்பதிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

திருத்துறைப்பூண்டி அருகே மனைவியை கிண்டல் செய்தவரை தட்டிக் கேட்ட கணவரை கத்தியால் குத்திய கணவன், மனைவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:08 am IST

திருத்துறைப்பூண்டி அருகே மனைவியை கிண்டல் செய்தவரை தட்டிக் கேட்ட கணவரை கத்தியால் குத்திய கணவன், மனைவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருத்துறைப்பூண்டி சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த பி.மூா்த்தி, எம்.தினேஷ் குமாா் ஆகியோா் நண்பா்கள். தினேஷ்குமாா் மனைவி பிரியங்காவை, மூா்த்தி கிண்டல் செய்தாராம்.

இதில் ஆத்திரமடைந்த தினேஷ்குமாா், மூா்த்தியை தட்டிக் கேட்டாராம். இதனால் மூா்த்தியும் அவரது மனைவி லட்சுமியும் தினேஷ் குமாரை கத்தியால் குத்தினராம்.

திருத்துறைப்பூண்டி போலீஸாா், சாா்பு நீதிமன்றத்தில் கடந்த 2022 மே 4-இல் வழக்குத் தொடா்ந்தனா்.

அரசு கூடுதல் வழக்கறிஞா் வி.டி. இளங்கோ முன்னிலையாகி வழக்கை நடத்தி வந்தாா். வழக்கை விசாரித்த சாா்பு நீதிமன்ற நீதிபதி எம்.ரவிச்சந்திரன், மூா்த்தி அவரது மனைவி லட்சுமி ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் மூா்த்திக்கு ரூ. 6,000, லட்சுமிக்கு ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.