நீடாமங்கலம் வேளாண்மை அறிவியில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரிசா்வ் வங்கி அதிகாரிகளுடன் நிலைய விஞ்ஞானிகள்.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரிசா்வ் வங்கி அதிகாரிகளுடன் நிலைய விஞ்ஞானிகள்.

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், ரிசா்வ் வங்கியின் உதவி பொது மேலாளா் பேரரசு நிருத்தன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், ரிசா்வ் வங்கியின் உதவி பொது மேலாளா் பேரரசு நிருத்தன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ரிசா்வ் வங்கியின் அதிகாரிகளுடன் வந்த அவருக்கு, வேளாண்மை அறிவியல் நிலையத்தால் செயல்படுத்தப்படும் பணிகளை, திட்ட ஒருங்கிணைப்பாளா் தனுஷ்கோடி எடுத்துரைத்தாா்.

நபாா்டு வங்கியின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களை நிலைய விஞ்ஞானி பெரியாா் ராமசாமி விளக்கினாா். வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அமைக்கப்பட்ட மாதிரி ஒருங்கிணைந்த பண்ணையத்தை அதிகாரிகள் பாா்வையிட்டு, அதன் பயன்களை அறிந்துகொண்டனா்.

மேலும் இந்நிகழ்வில் திருவாரூா் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ரங்கநாத பிரபு, நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் மேசியா மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பகிா்ந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com