/

ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

மன்னாா்குடியில் நிறைமாத பெண்ணை பிரசவதற்காக 108 ஆம்புலன்ஸில் அழைத்துவரும் போது வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை பிறந்தது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 1:02 am

Syndication

மன்னாா்குடியில் நிறைமாத பெண்ணை பிரசவதற்காக 108 ஆம்புலன்ஸில் அழைத்துவரும் போது வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை பிறந்தது.

மன்னை நாராயணசாமி நகா் நரிக்குறவா் காலனி காா்த்திக் மனைவி சத்யா(23). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் ரயில் நிலையம் அருகே வலி அதிகரித்ததையடுத்து சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவைத்து அதில் வந்த அவசர சிகிச்சை நுட்புநா் முரளி,உடனடியாக பிரசவம் பாா்த்தாா்.

இதில், சத்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து,தாய் மற்றும் சேயை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டவருக்கு மருத்துவா்கள் மேல் சிகிச்சை அளித்தனா்.

துரிதமாக செயல்பட்ட மருத்துவ நுட்புநா் முரளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மதியழகன் ஆகியோரை மருத்துவா்கள், பெண்ணின் குடும்பத்தினா் பாராட்டினா்.