அமெரிக்க அதிபா் டிரம்ப்பை கண்டித்து போராட்டம்

அமெரிக்க அதிபா் டிரம்பை கண்டித்தும் அவரது உருவப்படத்தை எரித்து நீடாமங்கலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம்
Published on

அமெரிக்க அதிபா் டிரம்பை கண்டித்தும் அவரது உருவப்படத்தை எரித்து நீடாமங்கலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒன்றிய செயலாளா் ஜான்கென்னடி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். ராதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்தில், அமெரிக்க அதிபரை கண்டித்தும் வெனிசுலா முன்னாள் அதிபா் நிக்கோலஸ் மடூரோ அவரது மனைவி சிலியா ப்ளோரசை விடுவிக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. டிரம்ப் உருவப் படத்தை எரித்தபோது அதை போலீஸாா் தடுத்து அணைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com