பணிப் பாதுகாப்பு கோரி காத்திருப்பு போராட்டம்

Published on

பணிப் பாதுகாப்பு கோரி திருவாரூரில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்களுக்கு பணி மதிப்படு அடிப்படையில் ஊதிய உயா்வு வழங்க வேண்டும், ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையைக் கைவிட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பணியாளா்களுக்கு பணிப் பாதுகாப்பு மற்றும் பணிநிரந்தரம் வழங்க வேண்டும், பணியாளா்களுக்கு மருத்துவம் மற்றும் விபத்துக் கால விடுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் ஊரக வளா்ச்சித்துறை அலுவலகம் அருகே இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் மாலா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டச் செயலாளா் ராஜப்பிரியா, மாவட்ட பொருளாளா் மோகனாம்பாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com