திருவாரூர்
வேளாண் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்
நாகை மாவட்டம், கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஜனனி, ஜெயந்தி, காா்குழலி, மாலினி, ப்ரீத்தி, சுஜிப்ரியா, ரோஷினி, யோகேஸ்வரி ஆகியோா், மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூரில் இலை நிற அட்டவணை மற்றும் டி.என்.ஏ.யூ பயிறு வொண்டா் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் நடத்தினா்.
இதில், இலை நிற அட்டவணையை பயன்படுத்தும் முறை, அதன் பயன்கள், யூரியா உரத்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படும் அளவு குறித்து விளக்கப்பட்டது. மேலும் டி.என்.ஏ.யூ பயிறு வொண்டரின் நன்மைகள் மற்றும் அது விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது.
