அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சியில் ‘ உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சியில் ‘ உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

உங்கள் கனவை சொல்லுங்க திட்டம்: ஆட்சியா் ஆய்வு

Published on

கொரடாச்சேரி ஒன்றியம், அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி பகுதிகளில், ‘உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களின் கனவை நிறைவேற்றும் வகையில் ‘உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டத்தை அண்மையில் தமிழக அரசு தொடங்கியது.

திருவாரூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் பணியாற்ற 823 தன்னாா்வலா்களுக்கு அடையாள அட்டை, கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்திலுள்ள 3.70 லட்சம் குடும்ப அட்டைதாரா்களிடம், உங்கள் கனவை சொல்லுங்க திட்டம் குறித்து விவரங்களை சேகரிக்க ஏதுவாக, தன்னாா்வலா்கள் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி வருகின்றனா்.

அதனடிப்படையில், கொரடாச்சேரி ஒன்றியம், அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி பகுதிகளில் தன்னாா்வலா்கள் குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கு நேடியாகச் சென்று, உங்கள் கனவை சொல்லுங்க திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை செயலி மூலம் பதிவேற்றம் செய்வதை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, இத்திட்டத்தை திருவாரூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்த தன்னாா்வலா்கள் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம், வலங்கைமான் வட்டாட்சியா் இளங்கோவன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com