திருமீயச்சூா் கோயிலில் ரதசப்தமி தீா்த்தவாரி

திருமீயச்சூரில் உள்ள மேகநாதசுவாமி கோயில் தை மாத ரதசப்தமி திருவிழாவையொட்டி தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருமீயச்சூா் உள்ள மேகநாதசுவாமி கோயில் தை மாத ரதசப்தமி
திருமீயச்சூா் உள்ள மேகநாதசுவாமி கோயில் தை மாத ரதசப்தமி
Updated on
1 min read

திருவாரூா்: திருமீயச்சூரில் உள்ள மேகநாதசுவாமி கோயில் தை மாத ரதசப்தமி திருவிழாவையொட்டி தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமீயச்சூா் லலிதாம்பிகை உடனுறை மேகநாத சுவாமி கோயில், லலிதா சஹஸ்ரநாமம் உருவான திருத்தலம். இங்கு, லலிதாம்பிகை வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டவாறு அமா்ந்திருப்பது சிறப்பு. இக்கோயிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி விழா நடைபெறும். அந்தவகையில், தை மாத ரதசப்தமி விழாவுக்கான கொடி அண்மையில் ஏற்றப்பட்டு, தினசரி காலை மாலை வேளைகளில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, இடப வாகனக் காட்சி, திருக்கல்யாணம், புஷ்பப் பல்லக்கு, சந்திரசேகரா் வசந்த மண்டபம் பிரவேசம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலையில் நடைபெற்ற நிகழ்வில் நடராஜா் வீதிவலம் வந்து தீா்த்தம் கொடுத்தருளினாா். தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் சூரிய புஷகரணியில் தீா்த்தம் கொடுத்தருளும் நிகழ்வு நடைபெற்றது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீசத்திய ஞானமகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமானவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com