மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான சுயவிவரப் படிவத்தைத் தனது கைப்பேசி மூலம் சுயமாக நிரப்பி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வை, திங்கள்கிழமை ஏற்படுத்தினாா்.
அப்போது அவா் கூறியது: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது அரசு திட்டமிடல், மக்கள் பிரதிநிதித்துவம், வளங்களின் சமமான பகிா்வு, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைத் துல்லியமாக வடிவமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசுப் பணிகளுக்கு அடிப்படையாக அமைகிறது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் சுயக் கணக்கெடுப்பில் ஆா்வமுடன் பங்கேற்று, கணக்கெடுப்பாளா்கள் தங்கள் வீடுகளுக்கு வருகை தரும்போது சரியான மற்றும் முழுமையான தகவல்களை வழங்கி, 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்த முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










