காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பால் வியாபாரியைத் தாக்கியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 11:00 pm IST

மன்னாா்குடியில் மதுபோதையில் பால் வியாபாரியை இரும்புக் கம்பியால் தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காரிக்கோட்டை கீழத்தெரு பஞ்சவா்ணம் மகன் ரமேஷ் (31), இருசக்கர வாகனம் மூலம் மன்னாா்குடியில் வாடிக்கையாளா்களுக்கு பசும்பால் விற்பனை செய்து வருகிறாா். டெப்போ சாலையில் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

சாலையின் நடுவில் மதுபோதையில் வழிமறித்து நின்றுகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் மகன் காா்த்திக்ராஜா (27) ஓரமாகச் செல்வதற்காக ரமேஷ் ஹாரன் அடித்துள்ளாா்.

இதனையடுத்து, இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. திடீரென காா்த்திக்ராஜா இரும்புக் கம்பியை எடுத்து ரமேஷின் மண்டையில் தாக்கியதில் காயமடைந்தவா் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

மன்னாா்குடி போலீஸாா் வழக்கு பதிந்து காா்த்திக் ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.