அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு நிபுணா்கள்.

Updated On :9 ஜூன் 2026, 1:07 am IST

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நிவேதா பெத்துராஜ் உதயநிதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் திங்கள்கிழமை வந்தது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாக அதிகாரிகள் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தெரிவித்தனா். இதையடுத்து, திருவாரூா் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

ஆட்சியா் அலுவலக வளாகம், அலுவலக அறைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை செய்யப்பட்டது. பின்னா், இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கூடுதல் போலீஸாா் பணியில் இருந்தனா். மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்தவா் யாா் என்று சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.