பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவருக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
திருவாரூா் பவித்திரமாணிக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (29). திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் 2-ஆம் நிலை காவலராக பணியாற்றி வருகிறாா். இதனிடையே 2021 கரோனா காலத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியிலிருந்தபோது, அங்கு பணியாற்றிய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகியவா், பின்னா் திருமணம் செய்ய மறுத்து விட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், சதீஷூக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.22,000 அபராதமும் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீா்ப்பு வழங்கினாா். அரசு சாா்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பெண்ணை கொல்ல முயன்ற வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 11 ஆண்டு சிறை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


