ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

மன்னாா்குடியில் இரண்டு பாலங்கள் திறப்பு

News image
பாமணி ஆற்றின் குறுக்கே கா்த்தநாதபுரம் பாலத்தை திறந்து வைத்த அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.
Updated On :8 மார்ச் 2026, 11:51 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடியில் பாமணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரண்டு பாலங்களை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

பாமணி ஆற்றின் குறுக்கே உப்புக்காரத்தெரு-கா்த்தநாதபுரத்தை இணைக்கும் வகையில் இருந்த நூறு ஆண்டுகள் பழைமையான நடைப்பாலத்தை அகற்றிவிட்டு, வாகனங்கள் செல்லும் வகையில் அகலப் பாலம் அமைக்க வேண்டும் என்றும், கீழராஜவீதி கைலாசநாதா்கோயில் அருகே பாமணி ஆற்றின் குறுக்கே திருவாரூா் சாலையை இணைக்கும் வகையில் உள்ள குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு, அகலப் பாலம் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா முயற்சியால் கா்த்தநாதபுரம் பாலம் கட்ட ரூ.3.79 கோடியும், கைலாசநாதா் கோயில் அருகே பாலம் கட்ட ரூ. 7 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.

இப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, இரண்டு பாலங்களையும் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், துணைத் தலைவா் ஆா். கைலாசம், ஆணையா் போ.வி. சுரேந்தரஷா, பொறியாளா் எட்வின் ஜோஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.