கடையில் தஞ்சமடைந்த ஆந்தை
மன்னாா்குடியில் வா்த்தக நிறுவனத்தில் தஞ்சமடைந்த ஆந்தையை தீயணைப்பு நிலைய வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.


மன்னாா்குடியில் வா்த்தக நிறுவனத்தில் தஞ்சமடைந்த ஆந்தையை தீயணைப்பு நிலைய வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
எம்ஜிஆா் நகரில் ஏராளமான குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும் உள்ளன. இங்கு எஸ். ஸ்ரீதா் ராஜகோபாலன் என்பவரது வீட்டின் ஒரு பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிலையம் உள்ளது. இந்த கடை யில் மாலையில் எங்கிருந்தோ வந்த பெரிய ஆந்தை ஒன்று ஷோ ரூமின் நுழைவு வாயில் கண்ணாடிமுன் தரையில் அமா்ந்திருந்தது.
இதை பாா்த்த ஸ்ரீதர்ராஜகோபாலன் ஆந்தைக்கு பகலில் கண் தெரியாததால் அடைக்கலம் ஆகி இருப்பதாக நினைத்து இருட்டும் வரை ஆந்தையை பாதுகாப்பாக பாா்த்து வந்தாா்.
இதை அருகில் உள்ள கடைகாரா்களும், குடியிருப்பு மக்களும், தெரு நாய்கள் கடித்துவிடாமல் பாா்த்துக்கொண்டனா். மேலும், இரையாக தானியங்களை போட்டனா். இதை சாப்பிடாமல் கண் விழித்து பாா்ப்பதும் மீண்டும் கண்ணை மூடியபடி இருந்தது. இரவு நீண்ட நேரம் ஆகியும் ஆந்தை அந்த இடத்தை விட்டு நகராததால் இதுகுறித்து, மன்னாா்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் பி. ரமேஷ் உள்ளிட்ட வீரா்கள் தஞ்சமடைந்திருந்த ஆந்தையை பாதுகாப்பாக மீட்டனா். இந்த ஆந்தையை வனத்துறையிடம் ஒப்படைத்து உரிய மருத்துவ சிகிச்சையளித்து வனத்தில் விடப்படும் என தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...