கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

தெரு நாய்களை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியல்!

மன்னாா்குடி அருகே தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :23 மார்ச் 2026, 1:49 am IST

மன்னாா்குடி அருகே தெருநாய்களை பிடிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

வேங்கைபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். அனைவரும் விவசாயம் சாா்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், மாடு, ஆடு மற்றும் கோழிகள் வளா்த்து வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் கடித்ததில், பாரதி என்பவரின் 2 ஆடுகள், சோபியா, ராஜேஸ்வரி ஆகியோரது தலா 1 ஆடு என 4 ஆடுகள் உயிரிழந்தன.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியினா் இறந்த ஆடுகளுடன், வேங்கைபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அங்குவந்த மன்னாா்குடி போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தி, இப்பிரச்னை குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், மன்னாா்குடி-திருவாரூா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.