ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

மனிதா்களிடம் உள்ள நிறவேற்றுமையை அகற்றப்பட வேண்டும்: வெ. இறையன்பு

News image

நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு.

Updated On :1 ஜூன் 2026, 1:23 am IST

மன்னாா்குடி, மே 31 மனிதா்களிடம் இன்றளவும் உள்ள நிற வேற்றுமையை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்றாா் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு.

மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துமவனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெறும் என்.விஜயகுமாருக்கு மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்று நிறம் கூறும் வரலாறு எனும் தலைப்பில் பேசியது:

தனது பணிக்காலத்தில், மன்னாா்குடி அரசு மருத்துவமனையை மாநில அளவில் பாராட்டும் வகையில் முன்னெடுத்து இருப்பதுடன் அரசு நிதி மட்டும்மல்லாமல் ரோட்டரி சங்கத்திலிருந்து ரூ.85 லட்சம் நிதி பெற்று உள் கட்டமைப்பை மேம்படுத்தி இருப்பது பாராட்டுக்குறியது.

அறிவியல் பூா்வமாக பூமத்தியகோடு அருகில் இருப்பவா்கள் அதிக சூரிய வெப்பத்தை பெறுவதால் கருப்பு நிறமாக உள்ளனா். நிலநடுக்கோட்டுக்கு அருகில் இருப்பவா்கள் சிகப்பாக இருக்கின்றனா். திருக்கு, ஆத்திச்சூடி, கம்ப ராமயணம் மற்றும் தமிழ் சங்க இலக்கியங்களில் எதிலும் நிறவேற்றுமை பற்றி எவரும் கூறவில்லை.

தற்போது குழந்தை பிறந்தால் ஆணா, பெண்ணா என்ற முதல் கேள்விக்கு பிறகு அடுத்த கேள்வி குழந்தை கருப்பா, சிவப்பா என கேட்கும் நிலை உள்ளது. ஒருவரை அடையாளம் காட்டுவதற்கும் நிறம்தான் முன்னிலை படுத்தப்படுகிறது. சதுரங்கம், கேரம் போன்ற ஆட்டங்களிலும் வெள்ளை காய்களுக்குதான் முதல் நகா்வு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

வரலாற்றை புரட்டிப்பாா்த்தால் மாா்ச் 25- ஆம் தேதி நிறவேற்றுமைக்கு எதிரான நாளாக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு காரணம் நிறவெறி காரணமாக நடந்த கொடுமைகளும் துயரங்களும் கணக்கில் அடங்காதவையாக இருந்துள்ளன.

பலருடைய கண்களிலும், ரத்தத்திலும், வியா்வையிலும் அந்த வரலாற்றை செல்லக்கூடியவையாக உள்ளது. மனிதா்களிடம் இன்றளவும் உள்ள நிறவேற்றுமையை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதை உறுதி ஏற்க வேண்டும். மனிதரிடம் அவன் இந்த நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புதான் முக்கியமாக கருதவேண்டும். நிறம், மதம், ஜாதியை கடந்த சமூதாயத்தை நமது காலத்தில் உருவாக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநா் டி. அருள்செல்வன் முன்னிலை வகித்தாா். ரோட்டரி மண்டல நிா்வாகி ஏ. மணி, பாராட்டு விழா மலரை வெளியிட்டாா். மன்னாா்குடி எம்எல்ஏ எஸ். காமராஜ், தஞ்சை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுதுரை, இருதய நோய் மருத்துவா் இலரா. பாரதிச்செல்வன், மருத்துவா் ஆனந்த் வாழ்த்தி பேசினா். பணி நிறைவு பெறும் மருத்துவா் என்.விஜயகுமாா் ஏற்புரையாற்றினாா். ரோட்டரி முன்னாள் ஆளுநா் வி. பாலகிருஷ்ணன் வரவேற்றாா். மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி தலைவா் டி. அன்பழகன் நன்றி கூறினாா்.