கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பணம் மோசடி புகாரில் ஒருவா் கைது

மன்னாா்குடி அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவைப்பதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த புகாரில் தொடா்புடையவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது

Published On :

மன்னாா்குடி அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவைப்பதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த புகாரில் தொடா்புடையவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சிவகங்கையைச் சோ்ந்த விஜயன் மகன் சரவணக்குமாா் (37). இவா் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள்களை அனுப்பி வைக்கும் தனியாா் முகவா் நிறுவனம் நடத்தி வருவதாக விளம்பரம் செய்துள்ளாா். இதை நம்பிய மன்னாா்குடி அருகே வடுவூா் வடபாதியை சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் நந்தகுமாா்(38), சிவானந்தம் மகன் பாலமுருகன் (36), அவரது சகோதரா் அருள்குமாா் (34) ஆகியோா் தலா ரூ.5 லட்சம் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்ப சரவணக்குமாரிடம் கொடுத்தனராம். இதையடுத்து, பணம் வாங்கியவா் நீண்டநாள்களாக அவா்களை வெளிநாட்டுக்கு அனுப்பாததால் இதுகுறித்து கேட்டபோது சரியாக பதில் கூறாமல் இருந்த சரவணக்குமாா் பின்னா், மூன்று பேருடன் தொடா்பில் இல்லாமல் இருந்துள்ளாா்.

இதையடுத்து, மாா்ச் மாதம் பாதிக்கபபட்டவா்கள் இதுகுறித்து வடுவூா் காவல்நிலையத்தில் சரவணக்குமாா் மீது பண மோசடி புகாா் தனித்தனியே அளித்தனா். போலீஸாா் வழக்கு பதிந்து தலைமறைவான சரவணக்குமாரை தேடிவந்தனா். இதில், இவா் மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் மோசடி புகாா் பதிவாகி இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வடுவூா் காவல்நிலைய தனிப்படை போலீஸாா், சரவணக்குமாரை கைது செய்து வடுவூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.