புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:20 pm

DIN

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தில்லி  ஷாகிதி பூங்காவில் தமிழக விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், அகில இந்திய கிஸான் சபை ( ஏஐகேஎஸ்) இந்திய விவசாயிகளை ஒருங்கிணைத்து தில்லி ஷாகிதி பூங்காவில் புதன்கிழமை முதல்  தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. முதல் நாள் போராட்டத்தில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இரண்டாவது நாளான வியாழக்கிழமையும் தமிழகம் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் தர்னாவில் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் குணசேகரன், பொதுச் செயலாளர் துரை மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் குணசேகரன் பேசியதாவது:
விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளின் சுபீட்சமே நாட்டின் முன்னேற்றமாகும். ஆனால், இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.  விவசாயிகளின் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை  நிர்ணயிக்க வேண்டும் என்றார் அவர்.
தமிழக விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் துரைமாணிக்கம் பேசுகையில், "விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் தலையாய கடமையாகும்.
ஆனால், மத்திய அரசு கடமை தவறி வருகிறது. பயிர் காப்பீட்டில், தேசிய காப்புறுதித் திட்டத்தை பயன்படுத்தாமல், தனியார் காப்புறுதி நிறுவனங்களைப் பயன்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பயிர்க் காப்பீட்டில் தேசிய காப்புறுதித் திட்டத்தையே பயன்படுத்த வேண்டும். கரும்புக்கான நிலுவைத் தொகையை விரைந்து அளிக்க வேண்டும்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விவசாயத்தை மத்திய அரசுப் பட்டியலில் சேர்க்காமல் மாநில அரசுப் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் தமிழக விவசாயிகல் 300 பேர் பங்கேற்றுள்ளனர்'  என்றார் துரைமாணிக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.