காற்று மாசு: உயர்நிலைக் குழுவை அமைத்தது மத்திய அரசு
தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மிக கடுமையான அளவு அதிகரித்து வரும் காற்று மாசுவை கண்காணிக்கவும், தீர்வு காணவும் 7 பேர் கொண்ட உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.


தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மிக கடுமையான அளவு அதிகரித்து வரும் காற்று மாசுவை கண்காணிக்கவும், தீர்வு காணவும் 7 பேர் கொண்ட உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த உயர் நிலைக் குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக செயலர் தலைமை வகிப்பார் என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் செயலர், நீத்தி ஆயோக்கின் கூடுதல் செயலர், தில்லி தலைமைச் செயலர், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், விதி சட்ட மையத்தின் உறுப்பினர் ஆகியோர் இந்த உயர் நிலைக் குழுவில் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி காற்று மாசு தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக செயலர் சி.கே. மிஸ்ரா தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகளும், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு, தடுப்பு ஆணையத்தின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
காற்று மாசு ஏற்பட்டுள்ள மாநிலங்கள் மேலும் மாசடைவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. சாலை திட்டங்களால் எழும் மாசு, கட்டுமான நடவடிக்கைகளால் எழும் மாசு, குப்பை எரிப்பதனால் ஏற்படும் மாசு, மின் உற்பத்தி நிலையங்களால் ஏற்படும் மாசு, தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு, வாகன பயன்பாட்டால் ஏற்படும் மாசு ஆகியவற்றை தடுக்க வேண்டும் என்று காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: செங்கல் சூளைகள், கட்டுமான சிமெண்ட கலவை கலப்பு ஆலைகள், கல் உடைப்பு ஆலைகள் ஆகியவற்றை தாற்காலிகமாக மூடுவதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலக்கரி பயன்பாட்டுக்கும் தடை விதிக்க வேண்டும்.
மத்திய சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாசு தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மத்திய அரசு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவற்றால் வெளியிடப்படும் காற்று மாசு தடுப்பு உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...