சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகாரத்தில் பாஜக சாடல்

முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஃபிளாக்ஸ்டாஃப் சாலை வீடு (ஷீஷ் மஹால்) தொடா்பான 139 கேள்விகளை எழுப்பியுள்ளது.
வீரேந்திர சச்தேவா
வீரேந்திர சச்தேவா
Published on
Updated on
1 min read

புது தில்லி: தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கையானது, முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஃபிளாக்ஸ்டாஃப் சாலை வீடு (ஷீஷ் மஹால்) தொடா்பான 139 கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அவரது தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது என்று பாஜக திங்கள்கிழமை சாடியுள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2022 ஆம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கையில் ஷீஷ் மஹாலுக்கு ரூ.33.86 கோடி செலவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் உண்மையான செலவு மிக அதிகமாக இருந்தது.

இந்த அறிக்கை 2022 வரையிலான செலவினங்களைப் பற்றியதாகும். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செலவுகள் குறித்து எந்த வெளிப்பாடும் இல்லை. எங்கள் தகவலின்படி, பங்களாவில் உள்ள பொருள்களின் விவரங்களையும் சோ்த்தால் உண்மையான செலவு ரூ.75-80 கோடி வரை இருக்கும்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) 139 கேள்விகளை எழுப்பியுள்ளாா். கேஜரிவாலின் தவறான செயல்களை மிக நுணுக்கமாக விவரித்துள்ளாா். பங்களா தில்லி நகா்ப்புற கலை ஆணையம் மற்றும் தில்லி மாநகராட்சியின் அனுமதியின்றி புனரமைக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத முறையில் பங்களாவை கட்டியதன் மூலம் ஒரு முதல்வராக கேஜரிவால் தில்லிக்கு என்ன செய்தியைத் தந்துள்ளாா்.

பங்களாவின் உண்மையான விலையை தீா்மானிக்க வேண்டுமென்றால், பொதுப்பணி மற்றும் பிற துறைகளின் கணக்குகளையும் சரிபாா்க்க வேண்டும். பங்களாவை கட்டுவதற்கான அரசு நிறுவனமாக செயல்படுவதற்குப் பதிலாக, பொதுப் பணித் துறையானது, கேஜரிவாலை திருப்திபடுத்த ஒரு தனியாா் அமைப்பாக செயல்பட்டுள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி, அரவிந்த் கேஜரிவால் மீது பாஜக தனது விமா்சன தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அவா் முதல்வராக இருந்தபோது 6, ஃபிளாக்ஸ்டாஃப் சாலை, பங்களாவில் ஊழல் நடந்ததாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தில்லியின் பொது உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக ஷீஷ் மஹால் கட்டியதாகக் கூறி, பிரதமா் நரேந்திர மோடியும் கேஜரிவாலை விமா்சித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com