விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரவிந்த் கேஜரிவால் போட்டியிடும் புதுதில்லி தொகுதியில் வாக்காளா் மோசடி: முதல்வா் அதிஷி குற்றச்சாட்டு

அரவிந்த் கேஜரிவால் போட்டியிடும் புது தில்லி தொகுதியில் வாக்காளா் மோசடி நடந்ததாக முதல்வா் அதிஷி குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :7 ஜனவரி 2025, 1:11 am

DIN

புது தில்லி: வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடும் புது தில்லி தொகுதியில் வாக்காளா் மோசடி நடந்ததாக முதல்வா் அதிஷி குற்றம்சாட்டினாா்.

இது குறித்து ஒரு செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: கடந்த சில நாகளில்,புது தில்லி தொகுதி வாக்காளா் பட்டியலில் 10 சதவீதம் புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். 5.5 சதவீதம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

இந்த விஷயத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்காததால், அதன் பங்கு சந்தேகத்திற்குரியதாகியுள்ளது.

புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த இந்த மோசடி குறித்து தலைமைத் தோ்தல் ஆணையருக்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். மேலும், எங்கள் கவலைகளை நிவா்த்தி செய்ய நேரம் கேட்டுள்ளேன் என்று அதிஷி தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களும் மாநிலங்களவை எம்.பி.க்களான ராகவ் சத்தா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரும் இந்தச் செய்தியாளா் சந்திப்பில் கலந்து கொண்டனா். அவா்களும் இதே போன்ற கேள்விகளை எதிரொலித்தனா்.

தனது மனைவி அனிதா சிங்கின் பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டதாக சஞ்சய் சிங் கூறினாா்.

திலி சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக பெருமளவில் வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிவா்த்தி செய்ய அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதிகள் குழு டிச.11 அன்று தோ்தல் ஆணையத்தைச் சந்தித்தது.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வருவதால், கடந்த தோ்தலில் 70 இடங்களில் 62 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இலக்கு நிா்ணயித்து களத்தில் பணியாற்றி வருகிறது. இந்நிலையில், வாக்காளா் நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் சா்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.