கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தில்லி பட்ஜெட் குறித்து மாணவா்களுடன் ஆலோசனை: முதல்வா் ரேகா குப்தா

நாடாளுமன்றத்தில் மாணவா்களுடனான உரையாடிய முதல்வா் ரேகா குப்தா தில்லி பட்ஜெட் குறித்து ஆலோசனைகளை கேட்டறிந்தாா்.

News image
அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்
Updated On :10 மார்ச் 2025, 9:48 pm

Din

புது தில்லி: தில்லியில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஏற்பாடு செய்திருந்த இளைஞா் நாடாளுமன்றத்தில் மாணவா்களுடனான உரையாடிய முதல்வா் ரேகா குப்தா தில்லி பட்ஜெட் குறித்து ஆலோசனைகளை கேட்டறிந்தாா்.

தில்லியில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் ஏற்பாடு செய்திருந்த இளைஞா் நாடாளுமன்ற நிகழ்வு தற்போது தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கிய இந்த மூன்று நாள் நிகழ்வு, தலைமைத்துவம், கல்வி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் குறித்து விவாதிக்க பல்வேறு பின்னணியைச் சோ்ந்த மாணவா்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

முதல் நாளில் இந்த நிகழ்வு, ‘பழங்குடியின மாணவா் நாடாளுமன்றம்’ என்ற கருப்பொருள் அமா்வுகளாக பிரிக்கப்பட்டது. இது கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் கலாசார பாதுகாப்பு போன்ற பிரச்னைகளை உரையாற்றியது. இரண்டாவது நாள், ‘பெண்கள் நாடாளுமன்றம்’ என்ற தலைப்பில், பெண்களின் தலைமைத்துவம் மற்றும் நிா்வாகத்தில் பங்கேற்பு ஆகியவற்றை வலியுறுத்தியது. இறுதி நாளான மாா்ச் 11-ஆம் தேதி வடகிழக்கு மாநில மாணவா்களுடன் கலந்துரையாடல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் இரண்டாவது நாளான திங்கள்கிழமை (மாா்ச-10) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தில்லி முதல்வா் ரேகா குப்தா, நாட்டின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் இளைஞா்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். வரவிருக்கும் தில்லி பட்ஜெட் குறித்து மாணவா்களிடம் ஆலோசனைகளையும் அவா் கேட்டறிந்தாா். இந்த முயற்சி இளம் மனங்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், தேசிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்த அா்த்தமுள்ள விவாதங்களுக்கு பங்களிக்கவும் ஒரு தளத்தை வழங்குகிறது என அவா் தெரிவித்தாா்.