தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

ஆட்டோ மீது சொகுசு கார் மோதல்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்

தில்லியில் ஆட்டோ மீது சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் பலத்த காயமடைந்தனர். 

Updated On :19 ஏப்ரல் 2018, 1:06 am IST

தில்லியில் ஆட்டோ மீது சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் பலத்த காயமடைந்தனர். 
இது குறித்து தில்லி காவல் துறையினர் புதன்கிழமை கூறியதாவது: தில்லி லடோ சராய் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு சொகுசு கார் வந்து கொண்டிருந்ததது.
அந்த வேளையில், சத்தர்பூரில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு 6 பேர் ஆட்டோவில் மத்திய தில்லி, பல்ஜீத் நகர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். லடோ சராய் பகுதியை ஆட்டோ சென்றடைந்த போது, சிக்னலில் நிற்காமல் வேகமாக வந்த சொகுசு கார், ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த சந்தன் ஜா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்த 5 பேர் எய்ம்ஸ் விபத்து சிகிச்சைப் பிரிவு, சப்தர்ஜங் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சொகுசு கார் ஓட்டுநரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.