ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பை உயர்த்துவது தொடர்பாக உயர் அதிகாரக் குழுவின் அறிக்கை வந்த பிறகு சிந்திக்கப்படும் என்று மாநிலங்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் மேஹ்வால் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா புதன்கிழமை பேசுகையில், "ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டம், 1995-இன்படி, மத்திய அரசின் பங்களிப்பு 1.6 சதவீதமாகும். இதை 8.33 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இபிஎஃப் திட்டம், 1995-இன்படி ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இத்திட்டமானது 2018-ஆம் ஆண்டில் வாழும் மக்களுக்கு எப்படிப் பொருந்துவதாக இருக்கும்? ஆகவே, தற்போதைய பொருளாதார சூழல், ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைப் பரிசீலித்து அரசின் பங்களிப்பை 1.6 சதவீதத்தில் இருந்து குறைந்தபட்சம் 4 அல்லது ஐந்து சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் பதில்: இதற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் பதில் அளித்துப் பேசுகையில், "பகத் சிங் கோஷ்யாரி தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையில் 8.33 சதவீதம் அளிக்குமாறு தெரிவித்திருந்தது. தற்போது அரசானது 1.6 சதவீதம் கொடுக்கிறது. அதன்படி ரூ.4,500 கோடி கொடுக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிலர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தவிர, கூடுதல் செயலர் தலைமையில் உருவாக்கப்பட்ட உயர் அதிகாரக் குழுவின் அறிக்கை வந்த பிறகு அரசு இதைப் பற்றி சிந்திக்கும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









