ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகம் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையை சமீபத்தில் ஓமனுடன் ஈரான் மேற்கொண்டது.
இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி செய்தியாளர்களுடன் பேசுகையில், “இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கும் அமெரிக்காவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது ஈரான் மற்றும் ஓமன் இடையேயான இருதரப்பு விவகாரம் மட்டுமே. இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவைக் கடுமையாகச் சாடிய பாகாயி, “சமீப அண்டுகளில் அமெரிக்காவின் செயல்பாடுகள் எந்த சட்டங்களையும் பின்பற்றாத ஒரு மாஃபியா கும்பலைப் போன்று உள்ளன. அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் வரை, நியாயமான செயல்பாடுகள் பற்றி நாங்கள் நம்பிக்கை வைக்க முடியாது” என்றார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதற்கான 'பொதுவான கொள்கைகள் மற்றும் செயல்பாட்டு வழிமுறைகள்' தொடர்பாக இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து போர்த் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தற்போது, ஹோர்முஸ் நீரிணை ஈரான் கட்டுப்பாட்டில் உள்ளது. சில நாள்களாக, நீரிணையைக் கடக்க முயன்ற பல கப்பல்களை ஈரான் புரட்சிகரப் படை திருப்பி அனுப்பியுள்ளது.
போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இம்மாதத் தொடக்கம் முதல் மீண்டும் ஈரானும் அமெரிக்காவும் பரஸ்பர தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஹோர்முஸ் மீதான கட்டுப்பாட்டை கைப்பற்ற இரு நாடுகளுக்கும் மோதல் களமாக இது மாறியுள்ளது.
கடலோர நாடான ஓமனை இதில் ஈடுபடுத்தி, சேவைக் கட்டணம் வசூலிப்பது போன்ற நிர்வாக கட்டுப்பாடுகளை கைவசம் வைத்திருக்க ஈரான் வலியுறுத்துகிறது. இரு நாள்களாக அப்பகுதியில் தாக்குதல் எதுவும் நடைபெறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Talks with Oman regarding Hormuz: Iran states the US not involved!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் பகுதியில் சிக்கியுள்ள 6,000 மாலுமிகளை வெளியேற்றுங்கள்! - ஐநா வலியுறுத்தல்!
ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது! டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடப்படுகிறது; மீறினால் தாக்குவோம்! ஈரான் அறிவிப்பு!
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! ஈரான் அறிவிப்பு!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



