மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை, பச்சோந்தி என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி விமர்சித்துள்ளார்.
தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயாரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்தி ஆகியோரை மம்தா பானர்ஜி சந்தித்து பேசியுள்ள நிலையில், சௌதரி இவ்வாறு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தில்லியில் அதிர் ரஞ்சன் சௌதரி பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான், மம்தா பானர்ஜியின் ஒரே குறிக்கோள் ஆகும். பிரதமர் பதவி தொடர்பான கனவில் அவர் இருக்கிறார். அவரிடம், தேவ கௌடாவுக்கு இருந்த தாக்கமும், குஜ்ராலுக்கு இருந்த தாக்கமும் உள்ளது.
ஒரு பக்கத்தில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை அழிக்க மம்தா பானர்ஜி முயற்சி மேற்கொண்டுள்ளார். மறுபக்கத்தில், அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ஆதரவை அவர் கோருகிறார். அவர் அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி ஆவார். அவரை காங்கிரஸும், காங்கிரஸ் தலைவர்களும் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். மம்தா பானர்ஜி ஒரு சர்வாதிகாரி; இந்நிலையில், தம்மை தற்போது பெண் துறவி போல காட்ட முயற்சி எடுத்து வருகிறார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டு வரும் வேளையில், 3ஆவது அணி என்று பேசிக் கொண்டு எதிர்க்கட்சிகள் இடையே மம்தா பானர்ஜி பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் மம்தா பானர்ஜி இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறார். ஒரு பக்கத்தில், 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு விட்டதாக குற்றம்சாட்டும் அவர், மறுபக்கத்தில் தனது மாநில எல்லைகளை சீலிட்டு அடைத்து விட்டார். மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மம்தா பானர்ஜி 2005ஆம் ஆண்டு கொண்டு ஒத்திவைப்பு தீர்மானத்தை யாராலும் மறக்க முடியாது என்றார் அதிர் ரஞ்சன் சௌதரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவ்!

இந்தியாவுக்கு 6 வது பதக்கம்! பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் விந்தியாராணி தேவி!

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


