டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

துப்பாக்கிக் குண்டுக் காயமடைந்தவர் சாவு 

தில்லியில் பல்ஸ்வா டைரி பகுதியில் குண்டுக் காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். 

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

தில்லியில் பல்ஸ்வா டைரி பகுதியில் குண்டுக் காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். 
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: தில்லி சம்தா விஹார் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (30). இவர் ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு தில்லி, பல்ஸ்வா டைரி பகுதியில் மார்பில் குண்டுக் காயமடைந்த நிலையில் கிடந்தார். சிகிச்சைக்காக புராரியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரை யாரும் சுட்டுக் கொன்றனரா அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கள்ளத் தொடர்பு விவகாரம் உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சுரேஷின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அவர் தனது மூன்று சகோதரர்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.