இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ராகுல் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்: ரஃபேல் விவகாரம்

ரஃபேல் விவகாரம் தொடர்பாக பாஜக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

ரஃபேல் விவகாரம் தொடர்பாக பாஜக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே பாஜக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி பேசுகையில், "கெளரவமான பாரதம், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பாரதம், இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய பாரதம் ஆகியவற்றை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி பாடுபட்டு வருகிறார். 
செய்தியாளர்களிடம் சுயமாகப் பேசுவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இயலவில்லை. முதலில் பொய் சொல்லவும், பொய்களின் மாயையில் மக்களை ஆழ்த்தி வைக்கவும் காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. இவ்வாறு பொய்களை கூறியிருந்தால் பாஜகவால் ஹரியாணா உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்றிருக்க முடியாது. வளர்ச்சி இந்தியா குறித்து பாஜக அக்கறை கொண்டுள்ளது. 
ஆனால், மக்களைப் பிரித்தாள காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது. மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் பதவியேற்ற போது, உள்ளூர் வேலைவாய்ப்புகளில் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளதே இதற்கு உதாரணமாகும். 
ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்திய பிறகும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை' என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தில்லி பாஜக எம்பிக்கள் பிரவேஷ் வர்மா, உதித் ராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் அலுவலகம் நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற மனோஜ் திவாரி உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.