டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஆம் ஆத்மியில் இணைந்த முன்னாள் நீதிபதி

முன்னாள் நீதிபதி ஸோரா சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில்  ஆம் ஆத்மிக் கட்சியில் சேர்ந்துள்ளார். 

Updated On :25 டிசம்பர் 2018, 5:58 am IST

முன்னாள் நீதிபதி ஸோரா சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில்  ஆம் ஆத்மிக் கட்சியில் சேர்ந்துள்ளார். 
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஸோரா சிங். இவர் ஓய்வு பெற்ற நீதிபதியாவார். இவர் தில்லியில் திங்கள்கிழமை முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முன்னிலையில் ஆம் ஆத்மிக் கட்சியில் இணைந்துள்ளார். 
இது தொடர்பாக மணீஷ் சிசோடியா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், " பஞ்சாப் நீதித் துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றிய ஸோரா சிங், ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். தனது பதவிக் காலத்தில் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் அவர் பணியாற்றியுள்ளார். பஞ்சாப் மக்கள் அவரின் அறிவு, அனுபவத்தால் பயன்பெறுவார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸோரா சிங்கை கட்சிக்கு வரவேற்று கேஜரிவால் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் "நீங்கள் (ஸோரா சிங்) கட்சியில் இணைந்தது ஆம் ஆத்மியின் அதிர்ஷ்டம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஸோரா சிங் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. தில்லி அரசு போல பஞ்சாப் அரசும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்றார்.
இந்நிகழ்வின் போது, ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ ஜெய் கிஷன் மீண்டும்  ஆம் ஆத்மியில் இணைந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.