ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

"நிர்பயா' வழக்கு: மரண தண்டனைக் கைதிகளின் மறுஆய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு

'நிர்பயா' வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூலை 9) தீர்ப்பளிக்கவுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2018, 12:12 am

DIN

'நிர்பயா' வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூலை 9) தீர்ப்பளிக்கவுள்ளது.
தில்லியில் கடந்த 2012, டிசம்பர் 16-ஆம் தேதி நள்ளிரவில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவப் படிப்பு மாணவி 'நிர்பயா' கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  
இந்த விவகாரத்தில் முகேஷ் (29), பவன் குமார் குப்தா (22), வினய் சர்மா (23), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு தில்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 5-ஆம் தேதி உறுதி செய்தது. இந்நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, வினய் சர்மாவும், பவன் குமார் குப்தாவும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த  மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட  நீதிபதிகள்,  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே 4-ஆம் தேதி ஒத்திவைத்தது.
மேலும், தில்லி காவல் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா, குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி.சிங் ஆகியோரை தீர்ப்பு தொடர்பாக  மே 10-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே,  தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மற்றொரு குற்றவாளியான முகேஷ் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான ராம் சிங், தில்லி திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கில் தொடர்புடைய சிறார் குற்றவாளி ஒருவர், கூர்நோக்கு இல்லத்திலிருந்து 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், 'நிர்பயா' வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 3 பேரின் மறு ஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய  அமர்வு திங்கள்கிழமை (ஜூலை 9) பிற்பகல் 2 மணிக்கு அளிக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.