ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஜிஎஸ்டியை குறைக்க கோரி  வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைக்கக் கோரி தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தில்லியில் செவ்வாய்கிழமை

Updated On :24 ஜூலை 2018, 12:24 am IST

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைக்கக் கோரி தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தில்லியில் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அகில இந்திய வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தில்லியில் வணிகர்களின் தேசிய இரண்டு நாள் மாநாட்டை நடத்தி வருகிறது.  இம்மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அதன் தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா தலைமையில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர். 
இந்நிலையில், ஜிஎஸ்டியை குறைக்கக் கோரி தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தில்லி நாடாளுமன்றச் சாலையில் செவ்வாய்கிழமை ஆர்ஏஈபாட்டம் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: சிறு வியாபாரிகளின் வணிகத்தை பாதிக்கும் வகையிலான ஜி.எஸ்டி வரியைக் குறைக்கக் கோரி தில்லி நாடாளுமன்றச் சாலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் செவ்வாய்கிழமை ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது. 
பல அத்தியாவசியப் பொருள்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது. இது அநீதியானது. இது உடனடியாக நீக்கப்பட வேண்டும். மேலும், ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு வழங்கப்பட வேண்டும். 
பொருள்களுக்கு விதிக்கப்படும் 28 சதவீத வரியை 18 சதவீதமாகக்  குறைக்க வேண்டும். மேலும், 
சாதாரண மக்களும் ஜிஎஸ்டி வரியை புரிந்து கொள்ளும் வகையில் அதனை எளிமைப்படுத்த வேண்டும்.  சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாடு தழுவிய வகையில் போராட்டம்  நடத்தப்படும் என்றார் அவர். 
புதுவை வணிக சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எஸ்.பாலு  தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டர்கள் தேசிய வணிகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.  இவர்கள் புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து கோரி நாடாளுமன்ற சாலையில் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.