தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை அகலப் பாதை திட்டப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் வா.மைத்ரேயன் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் அவர் திங்கள்கிழமை முன்வைத்த கோரிக்கை: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் உள்ள தஞ்சாவூர்-கும்பகோணம்-விழுப்புரம் வழித்தடம் அதிக பயணிகளின் ரயில் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ரயில் நிலையங்கள் "ஏ' பிரிவில் உள்ள ரயில் நிலையங்களாகும்.
தஞ்சாவூர்- விழுப்புரம் பிரிவில் செரிந்த கலாசாரம், சமயம், பாரம்பரியம் சார்ந்த, சுற்றுலாப் பயணிகள் அதிகம்
வரக்கூடிய முக்கிய தலங்கள் அமைந்துள்ளன. மேலும், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் மூலம் அதிகம் வருவாய் கிடைக்கும்.
கும்பகோணம், மயிலாடுதுறை பகுதியில் இருந்து அரிசி, சர்க்கரை வெளியே அனுப்பப்படுகிறது. அதேபோன்று, உரமும், சிமெண்ட் சரக்குகள் உள் வரத்தாக உள்ளன. இந்த வழித்தடத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், நெரிசல் ஏற்பட்டு ரயில்கள் தாமதமும் ஏற்படுகிறது. ரயில் போக்குவரத்து கொள்திறன் ஏற்கெனவே அதிக அளவையும் எட்டிவிட்டது.
இதனால், தஞ்சாவூர்- விழுப்புரம் பிரிவை இரட்டை அகலப் பாதையாக மாற்றுவது மட்டுமே தேவையைப் பூர்த்தி செய்வதாக அமையும். ஆகவே, தஞ்சாவூர்- விழுப்புரம் வழித்தடத்தை இரட்டை அகல ரயில் பாதையாக மாற்ற முன்னுரிமையை அளித்து, மக்களின் ரயில் தேவையை அளிப்பதற்கான பணியை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆரோவில் நகரில் மேலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்! அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி தகவல்
இளைஞரிடம் 2 சவரன் நகை, பணம் பறிப்பு: ஒருவா் கைது

காா் - ஆட்டோ மோதல்: உயிரிழந்தோா் எண்ணிக்கை 2-ஆக உயா்வு

குருமாவில் பல்லி: உணவகத்துக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


