என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

திருவெறும்பூரில் முக்கிய ரயில்கள் நின்று செல்ல அதிமுக எம்.பி. வலியுறுத்தல்

திருவெறும்பூரில் 15 முக்கிய ரயில்கள் நின்று செல்ல ரயில்வே அமைச்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில்

Updated On :24 ஜூலை 2018, 12:26 am IST

திருவெறும்பூரில் 15 முக்கிய ரயில்கள் நின்று செல்ல ரயில்வே அமைச்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.குமார் வலியுறுத்தினார். இது தொடர்பாக மக்களவையில் திங்கள்கிழமை விதி எண் 377-இன்கீழ் அவர் முன்வைத்த கோரிக்கை:
எனது மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள திருவெறும்பூர் ரயில் நிலையமானது தஞ்சாவூர்-திருச்சி வழித்தடத்தில் அமைந்துள்ள முக்கியமான ரயில் நிலையமாகும். 
திருச்சியில் உள்ள ஆயுதத் தளவாடத்  தொழிற்சாலை, பாரத் கனரக தொழிற்சாலை (பெல்) ஆகியவற்றில் பணியுரியும் ஏராளமான பணியாளர்கள், அலுவலகம் செல்வோர்,  சிட்கோ தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். 
மேலும், பல்கலைக்கழகம், கல்லூரி,  ஐடிஐ, என்ஐடி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ரயில்வே அமைச்சகம் இந்த ரயில் நிலையத்தை ஆதர்ஷ் ரயில் நிலையமாக தரம் உயர்த்தியுள்ளது.
இந்த ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் நின்று செல்கிறது. ஆகவே, முக்கியமான இந்த ரயில் நிலையத்தில் சேது எக்ஸ்பிரஸ், டிசிஎன்-எம்எஸ் எக்ஸ்பிரஸ், செம்மொழி எக்ஸ்பிரஸ்,  ஆர்எம்எம்-எம்யுவி எக்ஸ்பிரஸ்,  ஈஆர்எஸ்-கேஐகே எக்ஸ்பிரஸ், விஎஸ்ஜி-விஎல்என்கே எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ்,  ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ்,  டிபிஜே -எம்வி எக்ஸ்பிரஸ்,  ஆர்எம்எம்-பிபிஎஸ் எக்ஸ்பிரஸ்,   ஆர்எம்எம்-டிபிடிஒய் எக்ஸ்பிரஸ்,   சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் நின்று செல்ல ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.