எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மேம்பாலத் திட்டத்துக்கு நிதி: தூத்துக்குடி எம்.பி. கோரிக்கை

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு  நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

Updated On :24 ஜூலை 2018, 12:24 am IST

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு  நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மக்களவையில் அந்த தொகுதி அதிமுக உறுப்பினர் ஜே.ஜே.டி. நட்டர்ஜி  வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன்கீழ் அவர் முன்வைத்த கோரிக்கை: 
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பொதுமக்களின் மூன்று முக்கியக் கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. 
அதாவது, தேசிய நெடுஞ்சாலை என்எச்-45பி மீது அமைந்துள்ள குறுக்குச்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்கக் கோருவது,  என்எச்-7ஏ நெடுஞ்சாலையில் உள்ள தூத்துக்குடி- புதுக்கோட்டை  பகுதியிலும்,  உப்போடை  பகுதியிலும் மேம்பாலம் அமைக்கக் கோருவது ஆகியவையே இக்கோரிக்கைகளாகும். 
அதேபோன்று, என்எச்-45 பி சாலையில் தூத்துக்குடியில் எம்போதும்வென்றான் பகுதியில் சாலையின் இரு புறங்களையும் கடந்து செல்லும் வகையில் பொதுமக்களுக்காக குறிப்பாக மாணவர்களுக்காக சுரங்க நடைபாதை அல்லது நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உடனடியாக செயல்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
ஆகவே,  குறுக்குசாலை,  உப்போடை,  தூத்துக்குடி-புதுக்கோட்டை சாலையின் மற்றொரு பகுதி ஆகியவற்றில் மேம்பாலம் கட்டுவதற்கும்,  தூத்துக்குடியில் எப்போதும்வென்றான் பகுதியில் சுரங்க நடைபாதை அல்லது  நடை மேம்பாலம் அமைப்பதற்கும் தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றார் அவர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.