இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

யுஜிசியை உயர் கல்வி ஆணையமாக மாற்றக் கூடாது: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

பல்கலைக்கழக மானியக் குழுவை (யுஜிசி) உயர் கல்வி ஆணையமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மக்களவையில் அதிமுக திங்கள்கிழமை வலியுறுத்தியது.

Updated On :24 ஜூலை 2018, 12:25 am IST

பல்கலைக்கழக மானியக் குழுவை (யுஜிசி) உயர் கல்வி ஆணையமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மக்களவையில் அதிமுக திங்கள்கிழமை வலியுறுத்தியது.
இதுதொடர்பாக மக்களவையில் திங்கள்கிழமை உடனடி கேள்வி நேரத்தின்போது கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.அசோக்குமார் முன்வைத்த கோரிக்கை வருமாறு:
1956-இல் அமைக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவானது (யுஜிசி) உயர் கல்வி நிறுவனங்களின் கற்பித்தல்,  ஆராய்ச்சி போன்றவற்றைக் கண்காணித்தல்,  மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்துடன், இப்பணிகளுக்குத் தேவையான நிதி உதவியையும் சரியான முறையில் அளித்து வருகிறது.
தற்போது யுஜிசிக்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைப்பது தொடர்பாக வரைவுச் சட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்,  மாநிலங்களுக்கு அனுப்பி கருத்துக் கேட்டுள்ளது. 
யுஜிசிக்கு  நிர்வாக மற்றும் நிதி அதிகாரம் உள்ளது. ஆகவே, அதுவே போதுமான அமைப்பாகும்.  
உயர் கல்வி  தொடர்பாக மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கக் கூடிய அதிகாரம் உயர் கல்வி ஆணையத்திடம் இல்லை. ஒழுங்கும்படுத்தும் நிர்வாக அதிகாரம் மட்டுமே உள்ள இந்த ஆணையம்  தேவையற்றது என்பதுதான் தமிழக அரசின் கருத்து.
உயர் கல்வி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் அதிகாரம் முழுக்க, முழுக்க சட்டப்பூர்வ நிறுவனமான பல்கலைக்கழக மானியக் குழுவிடம்தான் இருக்க வேண்டும். உயர் கல்வி ஆணையம் அமைந்தால் தமிழகத்தில் தற்போதுள்ள 13 பல்கலைக்கழகங்களுக்கு இனிமேல் நிதி எப்படி கிடைக்கும் என்ற அச்சம் ஏற்படுகிறது. 
தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவால் 100 சதவிகித நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  
இதற்குப் பதிலாக நிதி அதிகாரமற்ற உயர் கல்வி ஆணையம் அமைக்கப்பட்டு,  நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் மத்திய மனித வள அமைச்சகத்திடமோ அல்லது வேறு அமைப்பிடமோ சென்றால் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில்  60 சதவீதம் மத்திய அரசும்,  40 சதவீதம் மாநில அரசும் ஏற்கும் நிலை ஏற்படும்.
ஆகவே, உயர் கல்வி ஆணையம் அமைக்கும் முயற்சியை தவிர்த்து தற்போதைய பல்கலைக்கழக மானியக் குழுவே தொடர்ந்து இயங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.