வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஸ்வாதி மாலிவாலின் பதவிக்காலம் நீட்டிப்பு

தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவாலின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Updated On :24 ஜூலை 2018, 12:27 am IST

தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவாலின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தில்லி முதல்வர் அரவிந்த கேஜரிவால் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். 
தில்லி மகளிர் ஆணையத் தலைவியாக ஸ்வாதி மாலிவால் 2015 ஜூலை 27 ஆம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் இந்த மாதம் 27 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலின் பதவிக்காலத்தை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தில்லி முதல்வர் கேஜரிவால் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். 
இது தொடர்பாக சுட்டுரையில் கேஜரிவால் வெளியிட்ட பதிவில், "தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். அவரின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
கேஜரிவாலின் முடிவுக்கு ஸ்வாதி மாலிவால் நன்றி தெரிவித்துள்ளார்.  கேஜரிவாலின் சுட்டுரைப் பதிவைச் சுட்டிக் காட்டி, ஸ்வாதி மாலிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில்,"உங்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி.  தில்லி பெண்களின் பாதுகாப்பு,  கௌரவத்தை பாதுகாக்க கடந்த பதவிக்காலத்தை விட இந்த பதவிக்காலத்தில் இரு மடங்கு உழைப்பேன்' என்று பதிவிட்டுள்ளார். 
எதிர்ப்பு: ஸ்வாதி மாலிவாலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு சம்பூர்ணா தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளரும் ரோகிணி வார்டு கவுன்சிலருமான ஷோபா விஜேந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த பதவிக் காலத்தில் ஸ்வாதி மாலிவால் விளம்பர வெறி கொண்டு அலைந்தாரே தவிர, பெண்கள் நலனுக்காக ஆக்கபூர்வமாக எதையும் அவர் செய்யவில்லை. இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலுக்கு எந்த அடிப்படையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது?' என்று கேள்வி எழுப்பினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.