கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

விவசாயப் பயன்பாட்டுக்கான மின்கட்டண உயர்வு: தில்லி அரசு மீது  விஜேந்தர் குப்தா சாடல்

விவசாயிகளை தில்லி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா குற்றம்சாட்டினார்.

Updated On :8 ஜூன் 2018, 12:34 am IST

விவசாயிகளை தில்லி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அவர்  வியாழக்கிழமை கூறியதாவது: விவசாயப் பயன்பாட்டுக்கான  மின்சாரக் கட்டணத்தை தில்லி அரசு அதிகரித்துள்ளது.  முன்பு, 1 கிலோ வாட் மின்சாரத்துக்கு ரூ.20 மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது அத்தொகை ரூ.125-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரத்துக்கு தில்லி அரசு அதிக வரி வசூலிக்கிறது. இது அநீதியாகும். இதனால், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 மேலும், ஜன லோக்பால் மசோதாவை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமை சட்டப்பேரவையில் கூறியிருப்பது முற்றிலும் பொய்யாகும். உண்மையில், ஜன லோக்பால் மசோதா மத்திய அரசிடம் காத்திருக்கவில்லை. அந்த மசோதா தில்லி அரசின் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் கைலாஷ் கேலட்டிடம் காத்திருக்கிறது. ஆம் ஆத்மி அரசு தங்கள் மீது தவறை வைத்துக் கொண்டு மத்திய அரசைக் குற்றம் சொல்கிறது. மேலும், சட்டப்பேரவையில் பொய்யான தகவலைக் கூறிய மணீஷ் சிசோடியா சட்டப்பேரவையிலும், தில்லி மக்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார் அவர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.