மனைவி, மகன் ஆகிய இருவரையும் பராமரிப்பது குடும்பத் தலைவரின் கடமை என தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக குடும்ப வன்முறை வழக்கு ஒன்று தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரிந்து வாழும் மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சமாக ரூ. 10 ஆயிரம், மகனுக்கு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் கணவர் வழங்க வேண்டும் என நீதிமன்றம் கடந்த 2016, நவம்பரில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குடும்பத் தலைவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், மாதம் ரூ. 40 ஆயிரம் வருவாய் ஈட்டுகிறேன், வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனவே, ஜீவனாம்ச தொகையை ரூ. 10 ஆயிரமாக குறைத்து உத்தவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அவரது கணவர் மாதந்தோறும் ரூ. 45 ஆயிரம் வருவாய் ஈட்டுவதாகவும், பல்வேறு சொத்துகளில் பங்கும் உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் குமார் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:
இளைய மகன் எதிர்மனுதாரருடன் (மனைவி) வசித்து வருகிறார். மனைவி, இளைய மகன் ஆகியோரைப் பராமரிப்பது குடும்பத் தலைவரின் (கணவர்) கடமையாகும். எதிர்மனுதாரர் வேலையில்லாமல் உள்ளார். இதையெல்லாம் கருத்தில் கொண்டே மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கார்கில் போரில் இன்னுயிரை ஈந்த வீரர்களின் நினைவைப் போற்றுகிறோம்: மு.க. ஸ்டாலின்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியராக சாம்பியனான அனாஹத் சிங்!

பைரட்ஸ் ஆஃப் கரிபியன் திரைப்பட இசையை காப்பியடித்த அனிருத்?
பாஜக தொண்டருக்கு பதவியைவிட நாடும் இளைஞர்களும்தான் முக்கியம்: அமித் ஷா
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


