அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

கால்டாக்ஸி ஓட்டுநர் கொலை சம்பவத்தில் 6 பேர் கைது

"ஓலா' கால்-டாக்ஸி ஓட்டுநர் கொலைச் சம்பவத்தில் சிறார் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :29 மார்ச் 2018, 7:23 pm

"ஓலா' கால்-டாக்ஸி ஓட்டுநர் கொலைச் சம்பவத்தில் சிறார் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தில்லி ரோஹிணி மாவட்டக் காவல் துணை ஆணையர் ரஜ்னீஷ் குப்தா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: 
தில்லி அலிப்பூர் பகுதியில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ஓலா கால் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த நொய்டாவைச் சேர்ந்த ஹரி நாராயண் (35) என்பது தெரிய வந்தது. சம்பவத்தன்று வேலைக்குச் சென்றிருந்த நிலையில், கழுத்து நெரிக்கப்பட்டு ஹரி இறந்திருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது. மேலும், அவர் ஓட்டிச் சென்ற கார் காணாமல் போனதும் தெரிய வந்தது.
இதுகுறித்து அலிப்பூர் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, காணாமல் போன வாகனம் ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் உள்ள நஹரி கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது. மேலும், அந்த காரை கொள்ளையடித்த நபர்கள் நரேலா பகுதிக்கு வருவதாக புதன்கிழமை இரவு போலீஸாருக்கு தகவல் வந்தது. 
இதையடுத்து, போலீஸார் அங்கு மறைந்திருந்தனர். காரைக் கொள்ளையடித்த தில்லியைச் சேர்ந்த ராகுல் (21), நவீன் (25), சோனிப்பட் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் (19) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் அளித்த தகவலின் பேரில் கூட்டாளிகள் புன்ட்டி, விஷால் மற்றும் 17 வயது சிறார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பணத் தேவைக்காக காரை கொள்ளையடிக்கத் திட்டமிட்டு "ஓலா' கால் டாக்ஸி நிறுவனத்தில் சம்பவத்தன்று சவாரி செய்ய காரைப் பதிவு செய்தனர். 
அதைத் தொடர்ந்து, காரை ஓட்டி வந்த ஹரி நாராயணனை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு காரை ராகுல், நவீன், ஹேமந்த், புன்ட்டி ஆகியோர் கொள்ளையடித்தனர். பிறகு, அந்தக் காரை விற்பதற்கு 17 வயது சிறாரை நாடினர். மேலும், விஷாலிடம் காரை ரூ.25 ஆயிரத்திற்கு விற்க ஒப்புக் கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸ் அதிகாரி ரஜ்னீஷ் குப்தா கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.