தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தில்லியில் எட்டு இடங்களில் நடைமேம்பாலங்கள்: பொதுப் பணித்துறை ஒப்புதல்

தில்லியில் எட்டு இடங்களில் நடைமேம்பாலம் கட்டுவதற்கு தில்லி அரசின் பொதுப் பணித் துறையின் (பிடபிள்யூடி) நடைமேம்பாலக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:24 pm

தில்லியில் எட்டு இடங்களில் நடைமேம்பாலம் கட்டுவதற்கு தில்லி அரசின் பொதுப் பணித் துறையின் (பிடபிள்யூடி) நடைமேம்பாலக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் உள்ள ஓபராய் ஹோட்டல் அருகே உள்ள லாலா லாஜ்பத் ராய் சாலை கிராஸிங் கடப்பதற்கு அப்பகுதியில் உள்ள பிளைண்ட் ரிலீஃப் அசோசியேஸனின் (பிஆர்ஏ) மாணவர்கள் மிகுந்த சிரமப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் தில்லி அரசின் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டன. 
தற்போது, அந்தப் பகுதியில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று மேலும் ஏழு இடங்களில் நடைமேம்பாலம் பொதுப் பணித்துறையின் மூலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: லாலா லாஜ்பத் ராய் சாலையில் நடைமேம்பாலம் அமைப்பதற்கா பாலத்தின் தளம் அமைக்கப்பட்டுவிட்டது. தற்போது கட்டுமானத்திற்கான பொருள்கள் வரத் தொடங்கிவிட்டன. தளம் தயாராகிவிட்டால் விரைவில் பாலம் அமைக்கப்பட்டுவிடும் என்றார். 
பிஆர்ஏ வார்டன் பரஸ் நாத் கூறுகையில், "தற்போது எதிர்புறத்தில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் பார்வையற்ற மாணவர்கள் சாலையைக் கடக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், ஓபராய் மேம்பாலத்தைச் சுற்றி வர வேண்டியுள்ளது. தற்போது கட்டப்பட்டு வரும் நடைமேம்பாலம் பார்வையற்ற மாணவர்கள் பள்ளிக்கு மிகுந்த உதவியாக இருக்கும்' என்றார்.
இந்த நடைமேம்பாலம் தவிர, ஆர்டிஆர் மார்க், நெல்சன் மண்டேலா மார்க், சாராய் காலே கான் ஐஎஸ்பிடி, சக்கர்பூர் கிராமத்தில் உள்ள ரிங் ரோடு- மகாத்மா காந்தி மார்க், தமிழ்ச் சங்கம் மார்க், ஹர்ஸ்வரூப் காலனி, மாயாபுரி ஆகிய இடங்களில் நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
இதற்கான ஒப்புதலை பொதுப் பணித்துறை, போக்குவரத்துத் துறை, மாநகராட்சிகள், போக்குவரத்து காவல் துறை ஆகியவை அடங்கிய நடைமேம்பாலக் குழு அளித்துள்ளது. சத்தர்பூர், சுல்தான்பூரியில் நடைமேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
தற்போது பொதுப் பணித் துறையின் பராமரிப்பின்கீழ் 81 நடைமேம்பாலங்கள் உள்ளன. இவற்றில் 9 நடைமேம்பாலங்கள் 2017-18-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நடைமேம்பாலமும் கட்டுவதற்கு ரூ.1-4 கோடி செலவாகியுள்ளது. இவற்றில் பல பயன்படாத நிலையில் உள்ளன. 
பராமரிப்பு குறைபாடு, சுகாதாரமின்மை, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் செயல்படாமை, ஆக்கிரமிப்பு ஆகிய காரணங்களால் பாதசாரிகள் நடைமேம்பாலங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து சாலையைக் கடக்கும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.