நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு முரணானது: விமானப்படை துணை தளபதி

ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு முரணானது என்று விமானப்படை துணைத் தளபதி ரகுநாத் நம்பியார் தெரிவித்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு முரணானது என்று விமானப்படை துணைத் தளபதி ரகுநாத் நம்பியார் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். ரஃபேல் போர் விமானத்தின் விலை ரூ.540 கோடியிலிருந்து ரூ.1,600 கோடியாக உயர்த்தி வாங்கப்படுவதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்து வருகிறார்.
இதுகுறித்து தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விமானப் படை துணைத் தளபதி ரகுநாத் நம்பியாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு ரகுநாத் நம்பியார் அளித்த பதில் வருமாறு:
விமானத்தின் விலை குறித்து பேசி வருவோருக்கு, அதுபற்றி யாரோ தவறான தகவல்களை அளித்துள்ளனர். உண்மைகள் குறித்து அவர்கள் சரிவர தெரிந்திருக்கவில்லை. பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நாங்களும் பங்கேற்றோம். ஆதலால், ஒப்பந்தம் குறித்து எங்களுக்கு தெரியும். எனவே, ஒப்பந்தம் குறித்து தெரிவிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள், உண்மைகளுக்கு முரணாக உள்ளன என்பதே எங்களது கருத்தாகும் என்றார்.
ரஃபேல் போர் விமானம் விலை குறித்த கேள்விக்கு, "கடந்த 2008ஆம் ஆண்டில் பேசி முடிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கே ரஃபேல் போர் விமானம் தற்போது வாங்கப்படுகிறது' என்று பதிலளித்தார். 
குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, "அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.