
ஆதாயம் தரும் இரட்டைப் பதவி: குறுக்கு விசாரணைக்கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மனு
ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததாக குற்றம்சாட்டப்பட்ட 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், தில்லி அரசு அதிகாரிகளை
ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததாக குற்றம்சாட்டப்பட்ட 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், தில்லி அரசு அதிகாரிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இந்த மனு மீதான உத்தரவை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளதாக இந்த வழக்கைத் தொடுத்த பிரசாந்த படேல் தெரிவித்தார்.
பிரசாந்த் படேலை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஏற்கெனவே அளித்திருந்த மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அப்போது, நீதிபதிகள் தில்லி அரசு அதிகாரிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்தில் முறையிட அறிவுறுத்தினர்.
முன்னதாக, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததாக 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஜனவரி 19ஆம் தேதி தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, 20 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ரத்து செய்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் புதிதாக விசாரிக்க வேண்டும் என்றும் தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






