காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

விநாயகர் சதுர்த்தி: தலைநகர்  கோயில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் சதுர்த்தி நாளான வியாழக்கிழமை தில்லியில் உள்ள கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

Published On :

விநாயகர் சதுர்த்தி நாளான வியாழக்கிழமை தில்லியில் உள்ள கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தென்னிந்திய கோயில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. விநாயகர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 முழு முதற் கடவுளான விநாயகரின் அவதார தினம் விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தில்லியில் உள்ள பல்வேறு கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள பகுதிகளிலும், பிற விநாயகர் வீற்றிருக்கும் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மயூர் விஹார் ஃபேஸ் 1-இல் உள்ள சுப சித்தி விநாயகர் கோயில், மயூர் விஹார் ஃபேஸ் 2-இல் உள்ள ஸ்ரீ காருண்ய மகா கணபதி கோயில், மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் உள்ள ஸ்ரீஇஷ்ட சித்தி விநாயகர் கோயில், லாரன்ஸ் ரோடு கணேஷ் மந்திர், கனாட் பிளேஸ் விநாயகர் கோயில், நொய்டாவில் உள்ள ஸ்ரீவிநாயகா, ஸ்ரீகார்த்திகேயன் கோயில், மலைமந்திர் முருகன் கோயில், வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள சங்கடஹர விநாயகர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல், செம்பருத்தி, வில்வ இலை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், அவல், பொரிகடலை, கொழுக்கட்டை படையலிட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
வீடுகளில் பக்தர்கள் விநாயகர் படத்திற்கு மலர்களால் அலங்கரித்து, கொழுக்கட்டை படையலிட்டு வழிபாடு செய்தனர். முக்கிய தெருக்களின் சந்திப்புகளில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகளின் விற்பனை மும்முரமாக இருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.