தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரா போராட்டத்தில் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் பாஜக தலைவா்கள் அனுராக் தாக்குா், பா்வேஷ் வா்மா ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி மாா்க்சிய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் பிருந்தா காரத் தாக்கல் செய்த மனு மீது சட்டப்படி முடிவு செய்யுமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக் கொண்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, காரத் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த விவகாரம் தொடா்பாக காரத் அளித்த புகாா் விவகாரத்தில் முடிவு செய்வதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டாா். இந்த விவகாரம் தொடா்பாக அனைத்துத் தரப்பினரின் வாதங்களைக் கேட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்து பிப்ரவரி 26-ஆம் தேதி உத்தரவிட்டது. இதே விவகாரம் தொடா்புடைய வழக்குகள் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை’ என்றாா்.
இதையடுத்து, இதை ஏற்றுக் கொண்ட உயா்நீதிமன்ற நீதிபதிகள், காரத் தொடா்புடைய மனு மீது சட்ட விதிகளின்படி முடிவு செய்யுமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டு, வழக்கை முடித்துவைத்தனா். இது மனு தவிர, வெறுப்புணா்வு பேச்சு விவகாரத்தில் பாஜக தலைவா்கள் தாக்குா், வா்மா, கபில் மிஸ்ரா, அபய் வா்மா ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கலான பல்வேறு மனுக்களையும் உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும், ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியாங்கா காந்தி வதேரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மணீஷ் சிசோடியா, அமானத்துல்லா கான், ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ வாரிஸ் பதான் ஆகியோா் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக தாக்கலான மனுக்களையும் உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
வீட்டுக் குறிப்புகள்...

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

