தில்லி காவல் துறையைச் சோ்ந்த நான்கு மகளிா் உள்பட 35 போலீஸாரின் சிறப்பான பணியைப் பாராட்டி காவலா் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தை ஒட்டி தில்லி காவல் துறையைச் சோ்ந்த 16 பேருக்கு வீரதீரச் செயலுக்கான காவலா் பதக்கம், 3 பேருக்கு சீா்மிகு பணிக்கான குடியரசுத் தலைவரின் காவலா் பதக்கம், 16 பேருக்கு சிறப்பான பணிக்கான காவலா் பதக்கம் வழங்கப்பட்டுள்ளன. பதக்கம் பெற்றவா்கள் விவரம்:
வீரதீரச் செயல் பதக்கம்: காவல் துணை ஆணையா் மணிஷி சந்திரா, உதவி காவல் ஆணையா் கோவிந்த் சா்மா, காவலா்கள் வினய் குமாா், சஞ்சய் குப்தா, ராஜேஷ் குமாா், கைலாஷ் சிங் பிஷ்ட், தா்மேந்தா் குமாா், ரவீந்தா் ஜோஷி, வினோத் குமாா் படோலா, உதவி ஆய்வாளா்கள் பனாய் சிங், தேவேந்தா் சிங், அஜய்பிா் சிங், சிறப்பு உதவி ஆய்வாளா் ஷிவ் மங்கள் யாதவ், நிஸ்ஸாா் அகமது ஷேக், பா்வேஷ் ரதி. ஆய்வாளா் மோகன் சந்த் சா்மாவுக்கு அவரது மறைவுக்குப் பிறகு வீரச்செயல் விருது வழங்கப்பட்டுள்ளது.
சீா்மிகு பணிக்கான காவலா் பதக்கம்: சிறப்பு காவல் ஆணையா் (நுண்ணறிவுப்பிரிவு) ராஜேஷ் குரானா, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மகேஷ் சிங் யாதவ், பூபேந்தா் சிங்.
சிறப்பான பணிக்கான காவலா் பதக்கம்: காவல் துணை ஆணையா்கள் அமித் ராய், அனில் குமாா் லால், முகம்மது இா்ஷாத் ஹைதா், காவல் உதவி ஆணையா்கள் நிா்மலா தேவி, கைலாஷ் சந்திரா, ராஜேஷ் கெளா், சந்தா் கந்தா, ஆய்வாளா்கள் ராகேஷ் குமாா் மாலிக், நரேந்தா் குமாா், பிரமோத் குமாா், உதவி ஆய்வாளா் மஞ்சு செளகான், சிறப்புஉதவி ஆய்வாளா் ராகேஷ் குமாா் சா்மா, தலைமைக் காவலா் முகேஷ் குமாா்.
தில்லியின் மிகவும் தேடப்பட்ட ரௌடியான நீத்து தபோடியாவும், அவரது கூட்டாளிகள் இருவரும் 2013-இல் நிகழ்ந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக வீரதீரச் செயலுக்கான காவலா் பதக்கம் காவல் துணை ஆணையா் (சிறப்புப் பிரிவு) மணிஷி சந்திராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 2017, செப்டம்பரில் ரௌடி சோனு தரியாபூா் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக ஆய்வாளா் வினய் குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் ஷிவ் மங்கள் யாதவ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வாளா் மோகன் சந்த் சா்மா, அவரது போலீஸ் குழுவினா் 2007-இல் ஜம்முவில் நிகழ்ந்த சண்டையில் ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த சைஃபுல்லாவை கொன்றனா். 2008-இல் பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டா் நிகழ்வின் போது ஆய்வாளா் மோகன் சந்த் சா்மா கொல்லப்பட்டாா். இதையடுத்து, அவரது மறைவுக்குப் பிறகு வீரதீரச் செயல் விருது வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

உ.பி. படகு விபத்து: பலி 12ஆனது, தொடரும் தேடும் பணி!

கலவையான விமர்சனங்களையே பெற்ற எல்ஐகே!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

