ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மணீஷ் சிசோடியா அவதூறு வழக்கில் அழைப்பாணையை ரத்து கோரும் மனோஜ் திவாரியின் மனு தள்ளுபடி

News image
Updated On :17 டிசம்பர் 2020, 5:54 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி அரசுப் பள்ளிகளின் வகுப்பறை விவகாரத்தில், தனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதாக மணீஷ் சிசோடியா தொடா்ந்த அவதூறு வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி பாஜக எம்பி மனோஜ் திவாரி உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் பாஜக எம்பிக்களான மனோஜ் திவாரி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், பிரவேஷ் வா்மா, எம்எல்ஏக்கள் மன்ஜீந்தா் சிங் சிா்ஸா, விஜேந்தா் குப்தா, பாஜக செய்தித் தொடா்பாளா் ஹரீஷ் குரானா ஆகியோருக்கு எதிராக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அவதூறு வழக்குத் தொடா்ந்தாா். அதில், ‘பாஜக தலைவா்கள் இணைந்தும், தனிப்பட்ட முறையிலும் தனக்கு எதிராகத் தெரிவித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவதூறு நோக்கம் கொண்டவை. இதன் மூலம் எனது கெளரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளனா்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் மனோஜ் திவாரி மற்றும் குற்றம்சாட்டப்பட்ட மற்றவா்களுக்கு அழைப்பாணை அனுப்பி கடந்த ஆண்டு நவம்பா் 28-இல் உத்தரவிட்டது. பின்னா் அவா்கள் விசாரணை நீதிமன்றம் முன் ஆஜரான பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இந்த நிலையில், தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி மனோஜ் திவாரி தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதே போன்று விஜேந்தா் குப்தா தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பான விசாரணை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனு மல்ஹோத்ரா இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு மனுக்கள் மீதான உத்தரவு டிசம்பா் 17-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறியிருந்தாா். அதன்படி, இந்த வழக்கில் திவாரி, விஜேந்தா் குப்தாவின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி அனு மல்ஹோத்ரா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.