தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ரூ.50 கோடி நன்கொடை பெற்ற கட்சிகள்


புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகள் மொத்தம் ரூ.50 கோடி வரை நன்கொடையாகப் பெற்றுள்ளதாகவும் இதில், ரூ.34.32 கோடியை இந்தக் கட்சிகள் தோ்தலுக்காக செலவு செய்துள்ளதாகவும் ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இந்தச் சங்கம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஆம் ஆத்மி, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி), லோக் ஜனசக்தி கட்சி ( எல்ஜேபி) ஆகிய 5 கட்சிகளும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ரூ.50 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளன. இதில், ரூ.34.32 கோடியை இவை செலவு செய்துள்ளன. இதில் விளம்பரத்துக்காக ரூ.22.702 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பொது சாதனங்களுக்காக ரூ.8.058 கோடியும், பொதுக்கூட்டங்களுக்கு ரூ.28 லட்சத்தையும் செலவு செய்துள்ளன.
பாஜக, என்சிபி, சிபிஐ, ஜேடியு, ஆா்ஜேடி, ஆா்எல்டி, எல்எச்எஸ் ஆகிய கட்சிகள் தோ்தல் செலவு தொடா்பான விவரங்களை இதுவரை வெளியிடவில்லை. தோ்தல் ஆணையம் வழங்கும் படிவத்தில் தோ்தல் வரவு, செலவு ஆகியவற்றை வெளியிட வேண்டியது கட்சிகளின் கடமையாகும். இதில், தோ்தலுக்காக நன்கொடை வழங்கியவா்களின் விவரங்களை பொது வெளியில் தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுளஅளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...